யாழில் குழு மோதல்கள் அதிகரிப்பு:45 பேர் கைது!

0
228

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவாலி அட்டகிரி முருகன் கோவிலுக்கு அண்மித்துள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுள் ளது. ஒரு வீட்டில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐஸ்கிறீம் வானைக் கும்பல் தீயிட்டு கொளுத்தியது.

12 மோட்டார் சைக்கிளில் வந்த 25 பேரே மேற்படி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பித்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் துரத்திச் செல்லப்ப ட்டு பிடிக்கப்பட்டனர் என்று மானிப் பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வடமராட்சி பகுதியில் விளை யாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச் சினை குழு மோதலாக மாறியதில் மோதலுக்கு தயாராக வந்த 42 பேரினை தாம் கைது செய்துள்ளதாக பரு த்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கற்கோவளம் உதயதா ரகை விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட அணிகளிற்கிடையிலான உதைபந் தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று இடம்பெற்றுள் ளது.
இப்போட்டி நேற்று முன்தினம் சனிக் கிழமை இடம்பெற்றது.

இப் போட்டியில் பலாலி விண்மீன், குறு ஞ்சிக் குமரன் ஆகிய அணிகள் மோதின.

இப் போட்டியின் போது ஒருவர் தாக்கப் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக் கிழமை பலாலி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சக்கோட்டைப் பகுதியில் உள்ளவர்களை தாக்குவதற்காக கொட்டன்க ளுடன் வந்தபோது 42 பேரினை கைது செய் ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்த னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here