பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவது தொடர்கிறது.
இந்நிலையில் பாரீஸ் நகரில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு தெருவில் மர்ம நபர் ஒருவர் 7 பேரை கத்தியால் சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் வீழ்த்தினார். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்த 7 பேரில் 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் இரண்டு பேர் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் எனும் தகவல் வெளியாகியுள்ளது.