பிரான்சில் இருந்தது கடந்த 03.06.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (09.09.2018) ஞாயிற்றுக்கிழமை 7 வது நாளில் AMANCE நகரில் காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
நேற்று மாலை NANCY நகரை ஈருருளிப் பயணம் சென்றடைந்தது. இன்றும் செல்லும் வழிகளில் உள்ள மாநகர சபைகளில் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தபடி சென்றனர். இன்று மாலை Sarrebourg நகரை ஈருருளிப் பயணம் சென்றடைந்தது.
கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித் ஈருருளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்து பின்னர் தொடர்ந்து பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்சு ஸ்ராஸ்புர்க்கை 11.09.2018 மதியம் வந்தடைவதுடன், கடந்த 3ம் திகதி பாரிசிலிருந்து புறப்பட்ட ஈருருளி பயணப்போராட்ட வீரர்களும் ஒன்றாக சந்தித்து 11ம் நாள் பி.பகல். 3.00மணி முதல் 6.00மணிவரை ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ள ஓன்று கூடலிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)