சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைக் கட்டடம் ஐ.தே.க. யாழ்.மாவட்ட அலுவலகமாகின்றது!

0
713

யாழ் பரமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைக் கட்டடம் International Students Association of Tamileelam (ISATE)    ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட அலுவலகமாகின்றது.   இக்கட்டடம் முன்னதாக விடுதலைப் புலிகளது மாணவர் அமைப்பினது சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையாக செயற்பட்டிருந்தது. பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருந்த இக்கட்டிடம் தற்போது ஐ.தே.க பிரபலமொன்றின் சொத்தாகியுள்ளது.
isate-building-burnt_1
எனினும் இக்கட்டடத்தில் கட்டட நிர்மாணப்பணிகளை முன்னெடுக்க யாழ்.மாநகரசபை தடைவிதித்திருந்தது. நகர திட்டமிடல் விதிமுறைகளினை தாண்டி அக்கட்டடம் விஸ்தரித்து கட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது அதனை ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட தலைமை காரியாலயமாக பயன்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ம் திகதி வருகை தரவுள்ள பிரதமர் ரணில் இக்கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.isate-building-burnt-2

குறித்த சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை கடந்த 2005 ஆம் ஆண்டு பல தடவைகள் இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுக்களினாலும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

isate-building-burnt-3
கடந்த 12.05.2006 நள்ளிரவு சிறிலங்கா இராணுவத்தினரும் ஒட்டக்குழுக்களும் இணைந்து சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைக் கட்டடத்தை சூறையாடி தீவைத்தக் கொளுத்தினர். கணனி உள்ளிட்ட உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் பின் குறித்த பேரவையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. இன்று சுமார் 9 வருடங்கள் கடந்த நிலையில் ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட செயலகமாக மாறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

studentLet0815_01

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here