நாட்டில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு கூட்டாட்சி கொண்டுவரப்பட வேண்டும் : விக்கினேஸ்வரன்

0
345

vikiஎம­து ­நாட்­டில்­ ஒற்­றை­யாட்­சி­ மு­றை­நீக்­கப்­பட்­டு ­கூட் ­டாட்­சி ­மு­றை­ கொண்­டு­ வ­ரப்­ப­ட­ வேண்டும். பல­வா­றான கட்­ட­மைப்புக் குறை­பா­டு­க­ளி­னி­டையே தமிழ் பேசும் மக்­களின் வாழ்க்கை இலங்­கையில் நடை­பெற்று வரு­கின்­றது. இப்­பேர்ப்­பட்ட கட்­ட­மைப்புக் குறை­பா­டுகள் எமது தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு விமோ­ச­னத்தை அளிக்­காது நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­தாது, என்­பதே எனது வாதம். என்று வட க்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். அதன் கீழ் அநி­யா­ய­மாகச் சிறை வைக்­கப்­பட்­டி­ருக்கும்

கைதிகள் பொது மன்­னிப்பில் வௌிவர வேண்டும். அடுத்து அர­சியல் யாப்பு இந் நாட்டை ஒரு கூட்­டாட்சி நாடாக மாற்ற வேண்டும். சமஷ்டி அடிப்­ப­டையில் வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளுக்கு தன்­னாட்­சியை உறு­திப்­ப­டுத்தும் விதத்தில் சட்­டங்­களை மாற்­றி­ய­மைக்க வேண்டும். ஒற்­றை­யாட்சி முறை கைவி­டப்­பட வேண்டும். சட்­ட­வாட்சி நிலை­நி­றுத்­தப்­பட வேண்­டும என்றும் குறிப்­பிட்டார்.

13வது திருத்தச் சட்டம் மாகா­ணங்­க­ளுக்கு ஒரு கையால் கொடுத்து மற்­றக்­கையால் திருப்பி எடுப்­ப­தாவே அமைந்­துள்­ளது. மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைக் கொடுப்­பது போல் கொடுத்து ஆளுநர் ஊடாக மத்­திய அர­சாங்கம் கட்­டுப்­பா­டு­களை, அடக்­கி­யாளும் அதி­கா­ரங்­களைத் தன்­வசம் வைத்துக் கொண்­டுள்­ளது. இதுவும் வட­கி­ழக்கு மாகாண மக்­களைப் பொறுத்த வரையில் நல்­லாட்­சிக்கு வித்­தி­டு­வ­தாக இல்­லை­என்றும் அவர் குறிப்­பிட்டார்.

யாழ் நாவலர் தெரு தியாகி நம்­பிக்கைப் பொறுப்பு கருத்­த­ரங்க மண்­ட­பத்­தி­நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

சிங்­களம் நாட்டின் அர­சியல் மொழி என்று ச‘ரத்து 18(1) கூறு­கின்­றது. 18(2)ன் படி தமிழும் ஒரு அர­சியல் மொழி என்­கின்­றது. எதற்­காக தமிழும் சிங்­க­ளமும் நாட்டின் அர­சியல் மொழிகள் என்று குறிப்­பி­டப்­ப­ட­வில்லை? சிங்­கள மொழியை ஒரு­படி மேலே வைக்­கவே இந்த ஏற்­பாடு. எப்­பொ­ழுது தேசிய மட்­டத்தில் ஒரு மொழி இன்­னொரு மொழிக்கு உயர்­வாகக் காட்­டப்­ப­டு­கின்­றதோ அது இரு மொழிசார் மக்­க­ளி­டையே ஒற்­று­மை­யையும் சம­நி­லை­யையும் ஏற்­ப­டுத்த உத­வாது. எனவே எமது மொழி, மதம் பற்­றிய அர­சியல் யாப்பின் ஏற்­பா­டுகள் நல்­லாட்­சிக்கு ஏற்­பு­டைத்­தா­வன அல்ல.

இன்­னொரு உதா­ரணம் தரு­கின்றேன் – பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் ) என்று ஒன்று 1979ம் ஆண்டில் தற்­கா­லி­க­மாகக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அது கடந்த 35 வரு­டங்­க­ளாக நடை­மு­றையில் இருந்து வரு­கின்­றது. யுத்தம் முடிந்து கிட்­டத்­தட்ட ஆறு வரு­டங்கள் ஆகியும் அது நடை­மு­றையில் இருந்து வரு­கின்­றது. அதா­வது போர் முடிந்­துள்­ளது, ஜன­நா­யகம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது என்று கூறும் நாம் எதற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைத் தொடர்ந்து வைத்­தி­ருக்க வேண்டும்? இவ்­வா­றான சட்­டங்கள் நல்­லாட்­சிக்கு இட­ம­ளிக்கா. எம்­நாடு ஒற்­றை­யாட்­சி­முறை கொண்ட நாடு என்று அர­சியல் யாப்பின் ‘சரத்து 2 குறிப்­பி­டு­கின்­றது.

ஒற்­றை­யாட்சி முறை­பற்றி ஒரு முக்­கிய கருத்தை வௌியிட வேண்டும். 1833ம் ஆண்டு வரை வட­கி­ழக்கு மாகா­ணங்கள் வேறா­கவும், மலை­நாட்டு மாகா­ணங்கள் இன்­னொரு கூறா­கவும், கீழ்­நாட்டு மாகா­ணங்கள் மற்­றொரு கூறா­கவும் தென்­ப­குதி மாகா­ணங்கள் மேலு­மொரு கூறா­கவும் நான்கு பிரி­வு­க­ளாக இருந்­தன. இவை கிட்­டத்­தட்ட சுதந்­தி­ர­மான அல­கு­க­ளாகத் தம்­மி­டையே வேறு­பாட்டை வைத்துக் கொண்டே இயங்கி வந்­தன. வட­கி­ழக்கு மாகாண மக்கள் வேறு மொழி, வேறு மதங்கள், வேறு நடை­உடை பாவ­னை­களைக் கொண்­டி­ருந்­தனர். 1833ம் ஆண்டில் நிர்­வாக செயற்­திறன் கருதி எல்லா கூறு­க­ளையும் ஆங்­கி­லே­யர்கள் ஒன்­றி­ணைத்­தார்கள். இதன் கார­ணத்­தினால் பெரும்­பான்மை தமிழ் பேசும் மக்­களைக் கொண்ட வட­கி­ழக்கு மாகா­ணங்கள் பெரும்­பான்மை சிங்­கள

மக்­களைக் கொண்ட மற்­றைய மாகா­ணங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டன. அந்த இணைப்பின் நிமித்தம் தாமாக சுயா­தீ­ன­மாக இயங்கி வந்த மக்கட் கூட்டம் மற்­றை­ய­வ­ருடன் சேர்த்துப் பார்த்­த­போது தமது சுயா­தீ­னத்­தையும் பெரும்­பான்மைத் தன்­மை­க­ளையுந் தொலைத்து விட்­ட­வர்­க­ளா­கவே தென்­பட்­டார்கள். மற்­றைய ஏழு மாகா­ணங்கள் சேர்ந்து இயற்றும் சட்­டத்­திற்குக் கட்­டுப்­பட வேண்­டிய கட்­டாயம் அவர்கள் மீது திணிக்­கப்­பட்­டது. வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மற்­றைய மாகா­ணங்­க­ளுடன் சேர்க்­கப்­பட்­ட­போது முழு நாட்டின் சிறு­பான்­னை­யினர் ஆகினர். இரு மாகா­ணங்­களில் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் ஏழு மாகாணப் பெரும்­பான்­மை­யி­ன­ருடன் சேர்த்துக் கொள்­ளப்­பட்­டதால் அந்த வட­கி­ழக்குப் பெரும்­பான்­மை­யினர் நாட்டில் சிறு­பான்­னை­யினர் ஆகினர். இதனை வலி­யு­றுத்­து­வ­தா­கவே ஒற்­றை­யாட்சி அர­சியல் யாப்பு அமைந்­தது. வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் தனித்­துவம் பேணப்­ப­ட­வில்லை. பௌத்தம், சிங்­களம் ஆகி­ய­வற்­றிற்­கான முதன்­மைத்­து­வத்தின் கார­ண­மாக அர­சியல் யாப்பின் ஒற்­றை­யாட்­சித்­தன்மை தமிழ்ப்­பேசும் மற்­றைய மத மக்­களை இரண்­டாந்­தரப் பிர­ஜைகள் ஆக்­கி­விட்­டன. ஆகவே அர­சியல் யாப்பின் ஒற்­றை­யாட்­சித்­தன்மை நல்­லாட்­சிக்கு வித்­தி­ட­வில்லை.

13வது திருத்தச் சட்டம் மாகா­ணங்­க­ளுக்கு ஒரு கையால் கொடுத்து மற்­றக்­கையால் திருப்பி எடுப்­ப­தாவே அமைந்­துள்­ளது. மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைக் கொடுப்­பது போல் கொடுத்து ஆளுநர் ஊடாக மத்­திய அர­சாங்கம் கட்­டுப்­பா­டு­களை, அடக்­கி­யாளும் அதி­கா­ரங்­களைத் தன்­வசம் வைத்துக் கொண்­டுள்­ளது. இதுவும் வட­கி­ழக்கு மாகாண மக்­களைப் பொறுத்த வரையில் நல்­லாட்­சிக்கு வித்­தி­டு­வ­தாக இல்லை.

ஆகவே இப்­ப­டி­யான கட்­ட­மைப்­புக்­களின் மத்­தியில் நல்­லாட்­சியை உரு­வாக்க முடி­யுமா அதற்­கான மக்­களின் வாய்ப்­புக்கள் என்ன என்­பது தான் நாங்கள் இறு­தி­யாக ஆராய வேண்­டிய விடயம்.

வட­மா­கா­ணத்தில் தமிழ்ப்­பேசும் மக்­க­ளி­டையே தமிழில் பேசு­வதால் மக்கள் என்ற சொல்­லுக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அர்த்­தமே பொருத்தம் எனக் கணிக்­கின்றேன். எனவே நல்­லாட்­சி­யு­ட­னான புதிய அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்கிக் கொள்­ளு­வ­தற்கு தற்­போது நில­வு­கின்ற கட்­ட­மைப்­புக்குள் தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு இருக்கும் வசதி வாய்ப்­புக்­க­ளையே நான் இனி ஆராய வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஒற்­றை­யாட்சி, பௌத்­தத்­திற்கு முத­லிடம், சிங்­கள மொழிக்கு முத­லிடம், பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம், 13வது திருத்தச் சட்டம் என்று பல­வா­றான கட்­ட­மைப்புக் குறை­பா­டு­க­ளி­னி­டையே தான் தமிழ்ப் பேசும் மக்­களின் வாழ்க்கை இலங்­கையில் நடை­பெற்று வரு­கின்­றது. இப்­பேர்ப்­பட்ட கட்­ட­மைப்புக் குறை­பா­டுகள் எமது தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு விமோ­ச­னத்தை அளிக்­காது நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­தாது என்­பதே எனது வாதம்.

நல்­லாட்­சிக்­கான முதல் அலகு மக்கள் ஒப்­பு­த­லுடன் ஆட்சி நடக்க வேண்டும் என்­பது. 1972ம் ஆண்டின் குடி­ய­ரசு அர­சியல் யாப்பு இலங்கைத் தமிழ்ப்­பேசும் மக்­களின் ஒப்­பு­த­லுடன் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதா­வது தமிழ்ப்­பேசும் மக்­களின் பங்கு பற்­ற­லுடன் அர­சியல் யாப்பு அமைக்­கப்­பெ­ற­வில்லை. தமிழ்ப் பேசும் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவு பெற்ற மக்கட் தலை­வர்­களின் பங்கு பற்றல் இல்­லா­ம­லேதான் அர­சாங்கம் நடை பெற்று வரு­கின்­றது.

மூன்­றா­வது சட்ட மேலாட்சி பற்­றி­யது. பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் போர் முடி­வ­டைந்த நிலையில் தொடர்ந்து வலுவில் வைத்­தி­ருப்­பது சட்ட மேலாட்­சியைத் தடை செய்­கின்­றது. வட­கி­ழக்கு மாகாண மக்­களின் கருத்­த­றி­யாமல் பங்­கு­பற்றல் இல்­லாமல் 13வது திருத்தச் சட்­டத்தின் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு மாறாக பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கொடுக்­கா­மலும் மத்­திய

மாகாணம் அர­சாங்கம் நடந்து கொள்­வது வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் சட்ட மேலாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­ய­வில்லை.

வட­மா­கா­ணத்தில் ஒரு மாகாண அர­சாங்கம் நிறு­வப்­பட்­டுள்­ளது. அது தனது மன­துக்­கு­கந்த விதத்தில், அதன் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்ட விதத்தில்,மக்கள் தேவை­களைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஆட்­சியை நடத்த இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளதா என்றால் இல்லை என்றே பதி­ல­ளிக்க வேண்டும். ஆகவே சுதந்­தி­ர­மற்ற ஒரு அர­சாங்­கத்­தினால் எந்த அள­வுக்குப் பதி­ல­ளிக்கும் பாங்கை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடியும்?

எம்­மா­காண ஆட்­சியைப் பொறுத்த வரையில் நாங்கள் வௌிப்­படைத் தன்­மையை வலி­யு­றுத்­தியே வரு­கின்றோம். ஆனால் காணி­க­ளையும், வீடு­க­ளையும் மக்­க­ளுக்கு பெற்றுத் தரு­வதில் மத்­திய அர­சாங்­கத்­தி­னதும், மத்­திய அர­சாங்க அமைச்­சர்­க­ளி­னதும் உள்­ளீ­டுகள் அவ்­வா­றான வௌிப்­படைத் தன்­மையை உறு­திப்­ப­டுத்­த­வ­தாக அமை­ய­வில்லை. அர­சாங்கம் மாறியும் சில அலு­வ­லர்கள் மாகாண மக்­களின் பிர­தி­நி­தி­களைப் புறக்­க­ணித்து மத்­தியின் மதிப்­பற்ற மந்­தி­ரி­மார்­களின் அல்­லது முன்­னைய மந்­தி­ரி­மார்­களின் வலி­யு­றுத்­தல்­க­ளுக்கே வளைந்து கொடுப்­ப­வர்­க­ளாகத் தென்­ப­டு­கின்­றார்கள்.

சமாந்­த­ர­மான இரு ஆட்­சி­களை எமது அர­சியல் யாப்பு உறுதி செய்­வதன் மூலம் பொறுப்புக் கூறுந்­தன்­மையை இரு­சா­ர­ரரும் புறக்­க­ணிக்கும் விதத்தில் ஆட்சி நடை­பெற இட­ம­ளித்­துள்­ளது. நல்­லாட்­சிக்குப் புறம்­பான விதத்தில் ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றஞ்­சாட்டும் விதத்தில் அர­சியல் கட்­ட­மைப்பு அமைந்­துள்­ளதை நாங்கள் யாவரும் நோக்க வேண்டும்.

நடு­நி­லை­யான ஆட்­சியும் மக்­களை உள்­ள­டக்­கி­ய­தான ஆட்­சியும் கூட எமது கட்­ட­மைப்­புக்­களின் நிமித்தம் பாதிப்படைந்துள்ளன. பௌத்தமும், சிங்கள மொழியும் கூடிய மதிப்புப் பெற்றால் மற்றைய மதங்களும் மொழிகளும் உள்ளடங்காது வௌியில் நிற்கின்றன என்றுதானே அர்த்தம்? பௌத்தத்திற்கும் சிங்கள மொழிக்கும் முதலிடம் வழங்க வேண்டிய நீதித் துறையினரிடம் இருந்து எவ்வாறு நடுநிலைமையை எதிர்பார்க்க முடியும்? அண்மையில் எமது பிரதம நீதியரசர் திரு ஸ்ரீபவன் அவர்கள் மகாநாயக்க தேரர்களிடம் இருந்து ஆசி பெற்று வந்ததாக அறிய வந்தது. ஒரு புத்த விகாரைக்குப் போய் வந்ததில் பிழையில்லை. ஒரு புத்த பிக்குவை அவர் இல்லத்திற்கு வரவழைத்து புத்த மதக் கொள்கைகளைக் கேட்டறிவதில் பிழையில்லை. ஆனால் மகாநாயக்க தேரர்களிடம் ஆசி வேண்டி பௌத்தர் அல்லாத பிரதம நீதியரசர் ஒருவர் செல்வது அவர் அரசியல் யாப்பின் 9வது ஷரத்துக்குக் கட்டுப்பட்டுள்ளார் என்ற உண்மையையே வலியுறுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here