நல்லைக்கந்தன் சப்பரத்தேரில் எழுந்தருளினார்!

0
557

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.
22 நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆம் நாளாகிய இன்று சப்பரத் திருவிழா பக்தர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
கோபுரத்தை ஒத்த மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்திய முழக்கத்துடன் ஆலயத்தின் வெளிவீதியில் நல்லைக் கந்தனின் சப்பரத்திருவிழா நடைபெற்றது.
அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தன் வள்ளி, தெய்வானை சமேதரராய் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்தார்.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் நாளை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here