பிரான்சில் இருந்து கடந்த (03.09.2018) திங்கட்கிழமை அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (07.09.2018) வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளில்Vitry le Francois
நகரில் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த படையினர் பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியின் முன்பாக காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
நேற்றைய பயணப்பாதை மிகவும் கரடுமுரடானதாக இருந்ததுடன் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் நீரோடையின் பாலம் இல்லாத நிலையில் முழங்கால் வரையிலான நீரோடையைக் கடந்துவரும் நிலையும் ஏற்பட்டது.
தற்போது 200 கிலோமீற்றர் தூரங்களைக் கடந்து குறித்த ஈருருளிப் பயணம் தொடர்கின்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
Home
சிறப்பு செய்திகள்
காணொளிகள் பிரான்சில் ஐந்தாம் நாளில் Vitry le Francois நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்! (காணொளி)