நான்காவது நாளில் பிரான்சின் Vitry le Francois நகரைச் சென்றடைந்த ஈருருளிப் பயணம்!

0
299

பிரான்சில் இருந்தது ஜெனிவா நோக்கிய மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் 06.09.2018 வியாழக்கிழமை நான்காவது நாளில் Vitry le Francois நகரைச் சென்றடைந்தது.
சுமார் 70 கிலோமீற்றர் கடும் மலைப்பாங்கான பாதைகளுக்கு ஊடாகப் பயணம் செய்து Vitry le Francois நகரை இன்று மாலை சென்றடைந்து அங்கு நகரசபை மண்டபத்தில் நகரபிதாவிற்கான கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தின் போது பல வெளிநாட்டவர்கள் குறித்த ஈருருளிப் பயணத்தின் நோக்கம் அறிந்து, ஆச்சரியமடைந்ததுடன் பயணம் வெற்றியளிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here