துன்னாலை பகுதியில் இடம் பெற்ற உந்துருளி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் துன்னாலை வேம்படியைச் சேர்ந்த கந்தசாமி காந்தீபன் (வயது-25) என்பவரே பலியானவராவார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இவர் துன்னாலை வேம்படி பகுதியில் திருமணம் முடித்ததாகவும் உந்துருளியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது குடவத்தை பகுதியில் மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சை க்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இடைவழியில் அவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.