பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

0
254

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, அற்புதம்மாள் கூறியதாவது: ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. 28வது ஆண்டாவது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறியது மகிழ்ச்சி. ஜெயலலிதா, இவர்கள் விடுதலை தொடர்பாக இருமுறை அறிவித்தார். எனவே உடனடியாக தமிழக அரசு, எனது மகனை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கைவிடுக்கிறேன். முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை இன்று அல்லது நாளை நான் சந்தித்து, கோரிக்கைவிடுப்பேன். விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்ய கோரிக்கைவிடுப்பேன். இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார். நளினியின் தாய் பத்மா: ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 28 வருட காலம் அவர்கள் பட்ட ரணம் கொஞ்சமில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீராக சிந்தி கொண்டு இருந்தேன். புள்ளைங்க வரணும், புள்ளைங்க வரணும் என ஏங்கினேன். என் பிள்ளை மட்டுமல்ல 7 பிள்ளைகளும் வெளியே வர வேண்டும். 28 வருடம் சிறையில் வாடியுள்ளனர். இதைவிட வேறு ரணம் என்ன உள்ளது. இதைவிட தண்டனை என்ன உள்ளது? இவ்வாறு பத்மா தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here