எறிகணை வெடித்து சிதறியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
330

மாங்குளம் தேக்கம் காட்டுப்பகு தியில் எறிகணை வெடித்து சிதறியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்  திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது, நேற்றைய தினம் வழமை போன்று மாங்குளம் தேக்கம் காட்டுப் பகுதியில்  கண்ணி வெடிப் பொருட்களை அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த  பணியாளர்களினால் வெடி பொருட்கள் புதைக்கப்பட்ட இடங்களில் துப்புரவுப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு பணியாளர் துப்புரவு செய்த பகுதியில் எறிகணை ஒன்று காணப்பட்டதையடுத்து  அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு  அடையாளப்படுத்திக் கொண்டிருந்த போது திடீரென எறிகணை வெடித்துச் சிதறியுள்ளது.

இதன்போது, அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவரும் மற்றும் அவருக்கு  உதவியாக செயற்பட்ட மற்றைய பணியாளர் ஒரு வரும் மார்பு, தலை, கால் உட்பட பல இடங் களில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது, மார்புப் பகுதியில் ஷெல் சிதறல்கள் தாக்கிய மயில்வாகனபுரம், பிரம ந்தனாறு தருமபுரத்தை சேர்ந்த பத்மநாதன் திலீபன் (வயது28) என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்,
இதேவேளை, மாங்குளம் ஆதார வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்ட நிலையில்  மேலதிக அவசர சிகிச்சைக் காக பறநாட்டகல், வவுனியாவைச் சேர்ந்த   இராசரத்தினம் நிதர்சன் (வயது25) என்ற  இளம் குடும்பஸ்தர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சடலத்தை பார் வையிட்ட பின்னர்  மரண விசாரணையில் ஈடுபட்ட முல்லைத் தீவு மாவட்ட நீதிம ன்றத்தின் பதில் நீதி பதி என்.சுதர்சன்  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முள்ளியவளை மாஞ்சோலையில் அமைந்துள்ள முல் லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசா லையில்  ஒப்படைத்து   பிரேத பரிசோத னையின் பின்னர் சடலத்தை  உறவி னர்களிடம் கையளி க்குமாறு மாங்குளம்  பொலிஸாருக்கு  உத்தரவு பிறப்பித்து ள்ளதுடன் எதிர்வரும் 27-ம் திகதி வியாழ க்கிழமை காலை வைத்திய  அதிகாரி களின் பிரேத பரி சோதனை அறிக்கையுடன், சம்பவம் தொடர் பாக அறிக்கையையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தர விட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here