அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதேநேரம், ஆறு வருடகாலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தத்துவங்கள், கடமைகள், பணிகள் என்ற உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருக்க வேண்டும். மதம் சார், இனம் சார், ஒற்றுமை பேணப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தல் வேண்டும் என்ற விடயங்கள் உள்வாங்கப்ப ட்டுள்ளன. அரசியலமைப்பின் 31ஆம் உறுப்புரையை திருத்துவதன் மூலம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘ஜனாதிபதி பதவிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆள் எவரும் அதன் பின்னர் அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படு வதற்கு தகைமையுடையவராகார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி சுகயீனமுற்றால் சபாநாயகர் பதில் கடமையாற்ற வேண்டும் சபாநாயகருக்கும் இயலாத பட்சத்தில் பிரதி சபாநாயகர் பதில் கடமையாற்ற வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதேபோன்று அமைச்சரவை அமைச்சர் களின் எண்ணிக்கை 30 ஐ விஞ்சலாகாது என்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அல்லாத அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் எண்ணிக்கை மொத்தம் 40 ஐ விஞ்சலாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 30 ஆம் உறுப்பு ரையை மாற்aடு செய்வதன் மூலம் பின்வரும் விடயம் கூறப்பட்டுள்ளது.
இலங்கை குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவராகவும் ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவராகவும், ஆயுதந்தாங்கிய படைகளின் படைத் தலைவராகவும் இருத்தல் வேண்டும். ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும் என்பதுடன் ஐந்து ஆண்டுகள் கொண்டதொரு காலப் பகுதிக்குப் பதவி வகித்தலும் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.