ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் உள்ள குர் திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங் கரவாத அமைப்பாக அறி வித்துள்ளன.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.
இங்கிருந்தவாறு துரு க்கி எல்லையில் பயங்கர வாத தாக்குதல்களை அவ் வப்போது நடத்தி வருகின் றனர். இவர்களை வேட்டை யாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஈராக் கின் வடக்கு பகுதியில் உள்ள சாப், காரா மற்றும் ஹக்குர்க் பகுதிகளின் வான் பகுதிகளில் துருக்கி விமா னப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.