தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களும் விடுதலை!

0
123

Sequence-03_Still001தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 54 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் ஊர்காவற்றுறை, மன்னார் நீதிமன்றுகள் ஊடாக  செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் நடைபெறும் இலங்கை – இந்திய மீனவர் பேச்சு வெற்றியளிக்கும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புக்கமைய இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here