பிரான்சில் நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் இறுதிநிகழ்வு!

0
754

DSC_3731_resize24.11.2014 அன்று பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான ஆர்ஜந்தேயில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் அவரின் புகழ் உடலம் 01.12.2014 திங்கட்கிழமை அன்று மதியம் அக்கினியில் சங்கமமானது.

அன்று மதியம் 12.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஆர்ஜெந்தே தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் இருமருங்கிலும் ஏந்திவர அதன் பின்னால் மாணவர்களும் பெற்றோர்களும் மக்களும் மலர்கள் ஏந்திவர அவரின் புகழுடல்மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது.

மண்டபத்தில் மக்களின் மலர் வணக்கம், புகழ் வணக்கத்தைத் தொடர்ந்து, 1.30 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் தமிழீழத் தேசியக்கொடி எடுத்தவரப்பட்டு, சாவடைந்த மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக்கு ஆற்றிய பணிக்கு மதிப்பளித்து நாட்டுப்பற்றாளர் என்கின்ற உயரிய தமிழீழத் தேசிய மதிப்பளித்தலை வழங்கி அவர் ஆற்றிய பணியைத் தெரிவித்து அனைத்துமக்களும் எழுந்து நின்று தமிழீழ விடுதலைப்போரிலே ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் செய்குருதியில் செந்நிறமாகிப்போன எங்கள் தேசியக்கொடியை மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் புகழுடலில் போர்த்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர், ஆர்ஜெந்தே மாநகர முதல்வர், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், ரிரிஎன் தமிழ் ஒளி மற்றும் பொது அமைப்புக்கள், நண்பர்கள் பலர் தமது அறிக்கைகளை வாசித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 2.30 மணியளவில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மீது போர்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியையும் நாட்டுப்பற்றாளர் என்று உறுதிப்படுத்தப்பட்ட பத்திரத்தையும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்களால், நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புகழ் உடல் அக்கினியில் சங்கமமாவதற்கென உறவினர்கள் நண்பர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

தாய்மண்ணையும் அதன்விடுதலையையும் தன்னைவிட மேலாக நேசித்து அதனை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டிய இவரின் இழப்பானது.அவரது துணைவி, மகளுக்கு மட்டுமல்ல எம் இனத்திற்கே ஓர் இழப்பாகும். ஒவ்வொரு உயிரும் பிறந்தால் இறக்கத்தான் வேண்டும். இது இயற்கையின் நியதியாகும். ஆனால், மனிதனானவன் அவன் வாழ்ந்த அந்த இடைப்பட்ட காலத்தில் எதைத் தன்னுடைய மனித குலத்திற்கு செய்திருந்தான் என்பதைத் தமிழர்களாகிய நாங்கள் இன்ற தேடிப்பார்க்கவேண்டியவர்களாக உள்ளோம். ஆனால் அந்த வரிசையில் இல்லாது நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி தன்னால் முடிந்ததைத் தேசத்திற்காகவும் அதன் விடுதலைக்காகவும் பாடுபட்டு தேசப்பற்றாளனாய் அக்கினியில் ஒன்றாகிவிட்டார்.

 

jeyasothi 2jeyasothi 3jeyasothi 1jeyasothi 4jeyasothi 5jeyasothi 12jeyasothi 10jeyasothi 9jeyasothi 8jeyasothi 7jeyasothi 6JEYASOOTHI_arikkai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here