ஜெனிவா கூட்டத் தொடரில் – இலங்கைக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி!

0
169

இலங்கை குறித்து முன்வைக் கப்பட்டுள்ள தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கை மீதான விவாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் எதிர்வரும் 12-ம் திகதி நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39-வது கூட்டத் தொடர் எதிர்வரும் 10-ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு இந்த அறிக்கையானது தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில தினங்களில் உண்மை நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொட ர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் இலங்கை குறித்த அறிக்கையும் 39ஃ53.1 என்ற தலைப்பில் மனித உரிமை பேரவைக்கு சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்த விசேட நிபுணரின் அறிக்கை தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடு கள் அல்லது பிரித்தானியா இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றினை 2019ஆம் ஆண்டில் கொண்டு வரலாம் என எதிர்பார்க் கப்படுகின்ற நிலையில் அதற்கான முயற்சிகள் இந்தக் கூட்டத் தொடரிலேயே ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையின் செயற்பாட்டுக்காலம் நிறை வடைகின்றது.

இதன் பின்னர் இலங்கையானது பொறுப் புக்கூறல் முயற்சியை முன்னெடுக்கவேண்டு மாயின் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பிரேரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு பிரேரணையை 2019 ஆம் ஆண்டு கொண்டுவருவதற்கு தீவிரமாக தற்போது முயற்சிக்கப்படுகின்றது.

இம்முறை 39ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மற்றுமொரு பிரேரணையை ஐ.நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here