மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த வெடிபொருளை எடுத்துச் சோதனைக்கு உட்படுத்தியபோது இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது..
கடந்த வெள்ளிக்கிழமை (31) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.றுள்ளது.
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். பள்ளிமுனை – நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த வெடிபொருளை அவர்கள்; அவதானித்துள்ளனர்.
ஜேசு ரஞ்சித் (39) என்ற மீனவர் அதனை எடுத்து படகினுள் வைத்துச் சோதனை செய்த போது வெடிபொருள் வெடித்துள்ளது. சம்ப இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உடலின் பல பகுதிகள் சிதறியுள்ளன.
இதன் போது அவருடன் படகிலிருந்த ஏ.ஏ.சித்தி பிகிராடோ (35), எம்.அகஸ்ரின் பிகிராடோ (26) ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்தனர். அந்தோனி பிகிராடோ (39) சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.
அவரது உடலம் உடனடியாக மன்னார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் மன்னார் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக சட்டவிரோத வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது