தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழினஅழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா நெதர்லாந்து ஜேர்மனி பெல்ஜியம் பிரான்சு . இத்தாலி, நோர்வே, டென்மார்க் சுவீடன் போன்ற நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டம் ஈருருளிப் பயணம், மற்றும் நிழற்படக்கண்காட்சி போராட்டம் நடைபெறப் போகும் அதேவேளையில். வரும் 01.09.2018 பிரித்தானியாவிலிருந்து ஈருருளிப்பயணப்போராட்டம் ஆரம்பித்துள்ளது வரும் 3ம் திகதி பிரான்சு பாரிசிலிருந்து முதற்தடவையாக மூவர் 890 கிலோ மீற்றர் தூரம்ஜெனீவா வரை ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். அந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் 03.09.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆர்ஜெர்ந்தே 95 மாவட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக ஈகைச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கம் செய்து பின்னர் 11.00 மணிக்கு பிரெஞ்சு நடாளுமன்றம் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நாட்டு விடுதலை அமைப்புகளின் முக்கியஸ்தகர்கள் முன்னிலையில் பிரெஞ்சு நாட்டு சனாதிபதிக்கான மனுவைக்கையளித்து ஈருருளிப் பேரணி பயணிக்கவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் எமது மக்கள் கலந்து கொண்டு ஈருருளிப் பயணப்போராட்ட உணர்வாளர்களுக்கு உந்து சக்தி கொடுக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
03.09.2018 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு (Parc de cerisier 37,Rue des Allobroges 95100 Argenteuil ) 11.00 மணிக்கு பிரெஞ்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பிக்கவுள்ளது. தொடர்ந்து தொடர்ந்து Ivry sur seine, Choisy le roi, Evry, Provins, Troyes வாழ் மக்கள் ஈருருளி பயண உணர்வாளர்கள் தங்கள் இடங்களுக்கு வரும்போது அதிக அளவு திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு- 06 62 84 66 06
தமிழீழ மக்கள் பேரவை- 06 60 82 27 19
மேலதிக தொடர்புகளுக்கு: தமிழர் ஒருங்கிணைப்புக்குழுபிரான்சு – 01 43 15 04 21
ஈருருளி போராட்ட உணர்வாளர்களுக் பிரான்சு வர்த்தக பெருந்தகைகள் ஈருருளி வாங்குவதற்காகவும் ஏனைய பயண தேவைகளுக்கும் தமது இதயபூர்வமாக பங்களிப்பை வழங்கியிருந்தமையும்இ இன்று ஓரளவிற்கு தரம் வாய்ந்த ஈருருளியை அதற்குரிய கடையில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.