அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த காணி 2 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் சிறீலங்காப் படைகளிள் இனவெறித தாக்குதலில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்தபோது சிறீலங்கா இராணுவத்தால் இக்காணி ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி சிறீலங்கா படை முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.