பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து சிறீலங்கா விமானப்படையே சாத்திய ஆய்வை மேற்கொள்ளப் போவதாக, சிறீலங்கா விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிக்க மைத்திரி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி குற்றம்சாட்டி வந்த நிலையில் கொழும்பில நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இந்தியா முன்வைத்த வரைவுத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா விமானப்படையே இந்தப் பணியை முன்னெடுக்கும். இதற்கு தேவைப்படும் 1.2 பில்லியன் ரூபாவை அரசாங்கமே வழங்கும் என்றும்,
ஏ-320 விமானங்கள் தரையிறங்கும் வகையில் பலாலி விமான ஓடுபாதை விரிவாக்கப்படும் என்றும் சிறீலங்கா விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.