நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் சிறீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தலைமையில் அங்கு துப்பரவுப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் பின்னர் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவரது தியாக வரலாற்றை சுருக்கமாக விளக்கும் பதாதைகள் சிங்களம் ,தமிழ் .ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த பதாதைகளே நேற்று முன்தினம் (29) இரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளன. அரச மற்றும் படைப்புலனாய்வாளர்கள் அல்லது அவர்களது அடிவருடிகளே இந்த ஈனத்தனமான செயலை புரிந்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றோமென முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தூபி பகுதியில் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட போது மாநகரசபை பணியாளர்கள் மிரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.