ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்த வேண்டும் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!

0
337

பயங்­க­ர­வா­தத்­த­டைச் சட்டத்தை நீக்­கு­தல், மக்­க­ளின் காணி­களை விரை­வாக விடு­வித்தல் உள்­ளிட்ட விட­யங்­களை சிறீலங்கா அரசு விரைந்து செயற்­ப­டுத்த வேண்­டும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் வலி­யுறுத்­தி­யுள்­ளது.
ஐரோப்­பிய ஒன்­றி­யம் மற்­றும் இலங்­கை­யின் இணை ஆணைக் குழு என்­ப­வற்­றின் கீழ் தொழிற் ப­டும் சட்­டத்­தின் ஆட்சி மற்­றும் மனித உரி­மை­கள் தொடர்­பான அரச தொழி­லா­ளர் குழு­மத்­தின் மூன்­றா­வது கூட்­டத்­தொ­டர் புருசெ­லில் நடை­பெற்­றது. இந் தக் கூட்­டத்­தின் போதே இவ்வாறு தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.
ஐரோப் பிய ஒன்­றி­யம் விடுத்­துள்ள அறிக்கையில் பயங்­க­ர­வா­தத்­த­டைச் சட்­டத்தை நீக்­கு­தல் அல்­லது பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­க­ளுக்­குட்­ப­டுத்­தல், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தல், 2015 அக்ரோப­ரில் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மைப்­பே­ர­வைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நடைமு­றைப்­ப­டுத்­தல், மக்­க­ளின் காணி­களை விரை­வாக விடு­வித்­தல் போன்ற விட­யங்­கள் தொடர்­பில் சிறீலங்கா அரசு துரித நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டும்.
மனித உரி­மை­கள் மற்­றும் நாட்­டி­லுள்ள நபர்­க­ளுக்­கான அடிப்­படை சுதந்­தி­ரம் என்­ப­வற்றை பேணு­வ­தற்­கும், அவற்றை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கும் சிறீலங்காவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நட­வ டிக் ­கை­கள் மற்­றும் முன்­ ந­கர்­வு­கள் பாராட்­டுக்­கு­ரி­யவை. ஆனால் மேற்­கு­றிப்­பிட்ட விடயங்களை சிறீலங்கா அரசு கட்­டா­யம் செய்தே ஆக­வேண்­டும்.
இதன்­போது மனித உரி­மை­கள் மற்­றும் அடிப்­படை சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்றை பாது­காப் ­பதற்கு சிறீலங்கா அரசால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாராட்டு தெரி­விக்­கப்­பட்­ட தோடு, இன­மத சார்­பான வன்­மு­றை­கள், செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­வும், அவற்றை முற்று முழு­தாக நிறுத்­து­வ­தற்­கும் சிறீலங்கா அரசு முன்­னெ­டுத்­து­வ­ரும் முன்­ந­கர்­வு­களை வர­வேற்­ப தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சிறீலங்கா அர­சால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் தொழி­லா­ளர்­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள், சுற்­றா­டல் பாது­காப்­புத் திட்­டங்­கள், சிறந்த நிர்­வா­கத்தை கட்­ட­யெ­ழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­கள் என்­ப­ன­வும் ஆரா­யப்­பட்­ட­து­டன், சிறீலங்காவின் நல்­லி­ணக்க முயற்­சிக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஒத்­து­ழைப்பு வழங்­கும் என­வும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.
மனித உரி­மை­கள் தொடர்­பான விட­யத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் அலு­வ­ல­கம், தக­வல் அறி­யும் உரி­மைச்­சட்­டம் போன்ற முக்­கிய நகர்­வு­கள் சிறீலங்கா அர­சால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. மனித உரி­மை­கள் விட­யம் தொடர்­பில் பன்­னாட்­டுக்­குப் பொறுப்­புக்­கூ­றல், தொழி­லா­ளர் உரி­மை­கள், சுற்­றா­டல் பாது­காப்பு ஆகிய விட­யங்­க­ளில் சிறீலங்காவின் தொடர்ச்­சி­யான செயற்­பா­டு­களை ஜரோப்­பிய ஒன்­றி­யம் கண்­கா­ணித்து வரு­கின்­றது.
ஊடக சுதந்­தி­ரம், சிவில் சமூ­கங்­க­ளின் உரி­மை­களை வலுப்­ப­டுத்­தல், பெண்­கள் மற்­றும் சிறு­வர் உரி­மை­களை மேலும் முன்­னேற்­று­தல், சிறு­பான்மை மக்­க­ளின் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்­தல், ஆகி­யன தொடர்­பி­லும் கூட்­டத்­தொ­ட­ரில் ஆரா­யப்­பட்­டன என்றும் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here