தமிழரின் இதய பூமி மணலாறு மண் பறி போனால் தமிழர் தாயகம் பறிபோனதற்குச் சமனாகும். எனவே அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு போராடி அதைத் தடுக்க வேண் டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ. கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்ட மிட்டு அபகரிக்கப்படுவதற்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நமக்கு நல்லது நடக்கும் என நம்பி இன்று நடுத்தெருவில்நாம் நிற்கின்றோம். அப்படியாக இருந்தால் ஏமாற்றத்துக்கும் தொடர் இன அழிப்புக்கும் பின்னல் உள்ள தத்துவங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிங்களவர்களை பொறுத்த மட்டில் இந்த இலங்கைத் தீவு சிங்களபௌத்த நாடு அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நிகைக்கின்றார்கள்.
இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விடயத்தில் ஆணித்தரமாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர். எதோ 16 இல தீர்வு 17 இல தீர்வு 18இல தீர்வு என்றும் இப்ப 19 இல தீர்வு வரும் என்று கூறி தமிழர்களை ஏமாற்றக் கூடாது நாங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும். எம்மைப் பொறுத்தவரையில் போராடாமல் எதுவும் கிடைக்கப்போவதில்லை.
எங்களின் இதய பூமி மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பரிபோனதற்குச் சமம். முல்லைத்தீவு பிரதேசம் சார்ந்த பிரச்சினை அல்ல. எமது முழுத் தேசப் பிரச்சினை, அதற்கும் மேலாக எமது இனத்தின் இருப்புப் பிரச்சினை, எனவே அனைவரும் அணி திரண்டு செயற்பட வேண்டும். அதன் மூலமே எமது நிலங்களை எம்மால் மீட்க முடியும் எனத் தெரிவித்தார்.