மகாவலி வலயம் என்ற போர்வையில் முல்லைத்தீவு மாவட்டத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி முல்லைத்தீவில் மாபெரும் பேரணி இன்று நடைபெற்றது.
முல்லைத்தீவு பி.டபிள்யூ சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி சென்றது.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கலந்துகொண்டனர்.
https://youtu.be/KEmq_XZZjm0?t=6