டீ.ஏ. ராஜபக்ச அரும்காட்சியக நிர்மாணத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் குறித்த எதிர்வரும் செப். 10 ஆம் திகதி கோத்தாபய ராஜபக்ச உட்பட 07 பேருக்கு விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தாபய ராஜபக்ச உட்பட 07 பேருக்கு எதிராக சிறீலங்கா சட்ட மா அதிபரினால், கடந்த வெள்ளிக்கிழமை (24) விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையைத் தொடர்ந்தே விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.