போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
போதைப் பொருள் தொடர்பாக குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் மரணம் பல சந்தேகங்களை எழுப்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவிததுள்ளார்.