விக்கியின் கோரிக்கையை நிராகரித்த சம்பந்தன் !

0
371

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், இரா.சம்­பந்­த­னைச் சந்­திப்­ப­தற்கு தனது அலு­வ­ல­கப் பணி­யா­ளர் ஊடாக கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். இத­ன­டிப்­ப­டை­யில் சந்­திப்பு எப்­போது என்று கேட்­ட­போது என செய்தியாளர் சம்பந்தனிடம் கேட்டதற்கு,
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைச் சந்­திக்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டால் சந்­திக்­க­லாம். அப்­ப­டிச் சந்­திப்பு நடை­பெற்­றால் அது தொடர்­பான செய்­தி­களை அறிந்து கொள்­ள­லாம். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்ளார்.
வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வட­கி­ழக்கு அரச தலை­வர் செய­ல­ணி­யில் பங்­கேற்க வேண்­டாம் என்று கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். அதன் பின்­னர் சந்­திப்­புக்­கான கோரிக்­கை­யை­யும் முன்­வைத்­தி­ருந்­தார். கடந்த இரண்டு நாள்­க­ளாக உடல்­நிலை சரி­யில்லை. இத­னால் அவ­ருக்­குப் பதில் அனுப்ப முடி­யா­மல் போய்­விட்­டது எனத் தெரிவித்த சம்பந்தன்.
வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னு­டன் சந்­திக்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டால் சந்­திக்­க­லாம். அப்­ப­டிச் சந்­திப்பு நடை­பெற்­றால் அது தொடர்­பான செய்­தி­களை நீங்­கள் அறிந்து கொள்­ள­லாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here