சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் மகிந்தராஜப்சவின் சகோதரருமான கோத்த பாய ராஜபக்சா உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோத்தாபயஷவின் தந்தையான, டீ.ஏ. ராஜபக்சவின் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதில், அரச நிதி முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கோத்தாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறீலங்கா சட்ட மாஅதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில், விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவாகும்.