இந்திய வானூர்திகள் பலாலி வானூர்தி தளத்தில் தற்போதுள்ள ஓடுபாதை மற்றும் வலையமைப்புக்கு அமைவாக தரையிறங்க முடியுமா என்பது தொடர்பில் இந்திய அதிகாரிகள் மூவர் நேற்று ஆய்வு செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து உலங்குவானூர்தி மூலம் பலாலி வானூர்தித் தளத்தை நேற்றுக் காலை வந்தடைந்தனர். பலாலி வானூர்தித் தளத்தின் ஓடுபாதையை ஆய்வு செய்தனர். தற்போது வானூர்திகள் தரையிறங்குவது, கிளம்புவது தொடர்பான முறைமைகளைப் பார்வையிட்டனர்.
அது தொடர்பான வலையமைப்புக்கள் எப்படி இயங்குவது என்பதையும் ஆராய்ந்தனர். ஆய்வுகளின் பின்னர் நேற்று மாலையே அதிகாரிகள் மூவரும் கொழும்பு திரும்பினார்கள்.
பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு உடனடியாக வானூர்திச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அமைவாக, ஆரம்பக்கட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வானூர்திச் சேவையை ஆரம்பித்த பின்னர், பிராந்திய வானூர்தித் தளமாக விரிவாகத் திட்டமிட்டுள்ளது. பலாலி வானூர்தி தளத்தை இந்திய நிர்வகிக்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.