இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து திரண்ட மக்கள் தமது உரிமைகள் பறிபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறீலங்கா படையினரால் வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் காணி உரிமை, மீனவர்களின் பிச்சினைகள் மற்றும் பறிபோகும் மக்களின் நிலம் போன்ற உரிமைகள் பறிபோவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.