ஆக்கிரமித்த காணிகளை இராணுவம் விடுவிக்க கூடாதாம்!

0
388

வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப் பதற்காக சிறீலங்கா இராணுவ முகாம் களை மூடி முகாம்களின் அளவைச் சுருக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்த்தனமானது என்று தெரிவித்துள்ள சிறீலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தள பதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனது தனிப்பட்ட கருத்தின்படி, இராணு வத்தின் குறைந்தபட்ச பலம், 150,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச் சினைக்காக மாத்திரமல்ல, வெளிநாட்டு அச் சுறுத்தல் உள்ளிட்ட எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்வதற்கும் நாட்டின் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்லியன் பேரைக் கொண்ட இராணுவப் படையை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனும், போரிடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் அணிதிரட்டப்படவில்லை.
வடக்கில் சில பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்றக் கூடாது.
பொதுமக்களின் காணிகளை திரும்ப அவர் களிடம் ஒப்படைப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வச முள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவத் தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டேன். இது முட் டாள்தனமானது.
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக, முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் கரு த்தை கேட்க வேண்டும். சரியான மதிப் பீட்டை செய்ய வேண்டும்
இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் விடுவிக்கப்படும் விடயத்துடன் நீங்கள் இண ங்கவில்லையா?
அரசியல் அழுத்தங்களுக்காக இதனைச் செய்யக் கூடாது, இதனை முறைப்படி செய்ய வேண்டும்.
இராணுவத் தளபதி இப்போது, இராணு வத்தினரை விலக்கி அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முனைகிறார். அவர் முகாம் களை மூடி வருவது குறித்து, களமுனைத் தளபதிகள் சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்று கேள்விப்படுகிறேன். அது ஒரு பிரச்சினை.
ஆயுதப் படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியின்;, உத்தரவுகளை இராணுவத் தளபதி நிறைவேற்ற வேண்டயதில்லையா?
எல்லாச் சந்தர்ப்பங்களிலும், தமது மேலதிகாரிகளை இராணுவத் தளபதி திருப்திப்படுத்த வேண்டியதில்லை. நாட்டின் பாது காப்புக்கு இராணுவத் தளபதியே பொறுப்பு.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியை அவர் புறக்கணிக்க அல்லது இணங்காமல் இருக்க முடியுமா?
இராணுவத்தை நிறுத்துவது பற்றிய அறிவு அரசியல்வாதிகளுக்கு இல்லை. அவர்கள் அதனை விளங்கிக் கொள்ளவில்லை.
நீண்ட காலத்துக்கு முன்னர், 2002இல், நான் யாழ்ப்பாண தளபதியாக இருந்த போது, உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பகுதிகளில் உள்ள முகாம்களை மூடுமாறு அரசா ங்கத்தினால் கேட்கப்பட்டேன். அப்போது நான் ஒரு மேஜர் ஜெனரல். பாதுகாப்பு நிலை மைகளைக் கருத்தில் கொண்டு அதனை நான் நிராகரித்தேன்.
அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அர சாங்கத்துடன் தானே நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்?
அது வேறுபட்ட சிந்தனை. இப்போது அவர்கள் எனது வழியில் பணியாற்றுவதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here