சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ நேற்று அதிகாலை காலமானார்!

0
470

lee kuan u 2015 03 18சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ (91) நேற்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் மார்ச் 29 ஆம் திகதி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடல் 28 ஆம் திகதி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த லீ மருத்துவ சிகிச்கைக்காக சிங்கப்பூர் பொது மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.லீ குவான் யூ 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து சிங்கப்பூரின் மாபெரும் வளர்ச் சிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது மறைவையடுத்து சிங்கப்பூரில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, மக்கள் செயல் கட்சியை தொடங்கி அந்நாட்டின் முதல் பிரதமர் ஆனார். 1959-1990 வரை பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிகாலத்தில் பிரிட்டிஷிடமிருந்து முழு அதிகாரத்தை அந்நாடு பெற்றது. 31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.

துறைமுக நகரமாக மட்டுமே அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது. ஊழலைத் தடுக்கும் ஆட்சியாக அவரது ஆட்சிக் காலம் இருந்ததால் மக்கள் மத்தியில் அவர் சிறந்த தலைவராக திகழ்ந்தார்.

சுத்தமே முதல் நோக்கமாகக் கொண்ட அவர், ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை அழைத்து, அவர்களுடன் இணைந்து, சிங்கப்பூரை சுத்தம் செய்தார். இதற்கு பின்னரே, சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள், அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர்.

ஆட்சியில் இல்லாத போதிலும் ஆளுமையுடன் திகழ்ந்த அவர் ‘உலகின் பாலைவனச் சோலை’ என அனைவராலும் அழைக்கப்பட்டார். நிர்வாக செயல்பாட்டில் தொடர்ந்து பங்காற்றிய லீ, 2011 ஆம் ஆண்டு அமைச்சரவை செயல்பாடுகளி லிருந்து விலகினார். சமீப காலமாக வயது மூப்பு காரணமாக பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

உலகத் தலைவர்கள் அனுதாபம்

லீ குவான் மறைவிற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் தந்தை லீயின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் செய்தியில், ‘சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ க்வான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்.

தொலை நோக்குப் பார்வையுடன் தலைவர்கள மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கையில் நமக்கு நிறைய பாடங்கள் உள்ளன. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது.

லீ யின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனைகள். லீயின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “லீயை இழந்து நிற்கும் சிங்கப்பூர் மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாமனிதர் அவர்.

மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். உலக நாடுகளில் சிங் கப்பூர் இன்று சிறந்து நிற்க காரண மானவர் “லீ” என்றும் குறிப்பிட் டுள்ளார்.

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் லீயின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ. நா. பொது சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிய அரசியல் வரலாற்றில் உயரிய இடம் வகிப்பவர் லீ. சிங்கப்பூரை உருவாக்கி 50 ஆண்டுகளாகும். இந்தத் தருணத்தில் நம்மை விட்டு லீ பிரிந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் என்றும் நம் நினை வில் இருப்பார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here