எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,691 பேர் எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில், இரத்தினபுரி மாவட்டத்தில் 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.