வருடாந்த நல்லூர் உற்சவல காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஆலய வளாகத்தில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை இம்முறை தடைசெய்யப்பட்டுள்ளது.
சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில் யாழ். மாநகர சபையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பனை ஓலையால் உருவாக்கப்பட்ட
அர்ச்சனை தட்டினை பயன்படுத்தி வருகின்றனர்.
பனை அபிவிருத்தி சபையினரால் பனை ஓலையினால்இழைக்கப்பட்ட அர்ச்சனை தட்டு உட்பட பல உற்பத்திப் பொருட்கள் நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டுகின்றது.