இத்தாலி ஜெனோவா நகரத்தின் மோரான்டி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானார்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களுக்கு மும்பு ஜெனோவா நகரின் மேற்கில் அமைந்திருக்கும் ஏ10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்ற பாலத்தின் ஒருபகுதி கடந்த 13-ம் தேதி திடீரென்று இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த பாலம், சுமார் 200 மீட்டர் நீளம் கொண்டது. இது சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்தது. அந்த சம்பவம் நடந்த போது அந்த வழியாக பயணம் செய்த பல மகிழுந்துகளும் பார ஊர்திகளும் பாலத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன. அவ்வாறு சிக்கி கொண்டன.
பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் கூறியது. பின்னர், வாகன இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து அடுத்தடுத்து இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த விபத்தின் மீட்பு பணிகள் நேற்று இரவுடன் முடிந்துவிட்டன. மீட்பு பணி முடிவுபெறும் தருவாயில் கார்களுக்கு இடையில் சிக்கி இருந்த 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து , இந்த கொடூர விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.