சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரிலுள்ள மருத்துவமனையில்சுகவீனமுற்று அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று(19) அதிகாலையில் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது பொதுச் செயலாளராக பதவியாற்றி அவர், கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2006 டிசம்பர் 31 ஆம் திகதி வரை பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாகவும் பதவி வகித்தார்.
கொபி அனான், சர்வதேச ரீதியிலான உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த முதலாவது கறுப்பின ஆபிரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1938 ஏப்ரல் 08 ஆம் திகதி தற்போதைய கானாவின் பகுதியான குமாசியில் பிறந்தார். இரட்டையர்களில் ஒருவராக பிறந்த கொபி அனானின் இரட்டை சகோதரி கடந்த 1991 இல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு ‘சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டதும் மிக அமைதியான உலகத்தை நோக்கிய செயற்பாட்டிற்காக உழைத்தமை’ தொடர்பில் கொபி அனான், ஐ.நா.வுடன் இணைந்து, சமாதானத்திற்கான நோபல் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வுக்கு புத்துணர்வு ஊட்டியமை மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கியமை தொடர்பில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டதோடு, ஆபிரிக்காவில் பரவல் மற்றும் சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தமை தொடர்பிலும், நோபல் குழுவினர் அவரை பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.