17.07.2018 அன்று ஜெனீவா முருகதாசன் திடலில் தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்குதமிழ் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாரிசிலிருந்து எதிர்வரும் 03.09.2018 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு பிரான்சு பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து ஈருருளிப் பயணம் ஆரம்பமாகவுள்ளது.
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து பகல் 14.00 மணிக்கு இடம் பெறும் பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.