இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

0
230


இந்தியாவின் முன்னாள் பிரமர் அடல்பிகாரி வாஜ்பாய் மரணமடைந்ததை உறுதி செய்தது டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை.  சிகிச்சை பலனின்றி, ஆகஸ்ட் 16ம் தேதி இன்று மாலை 5.05 மணிக்கு மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 93.

இந்தியாவின் முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்ப்டடு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக, கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நீரிழிவு நோயாளியான வாஜ்பாய்க்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here