செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்!

0
328

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு மனித உரிமைச் சதுக்கத்தில்  இன்று (15) பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.


ஆரம்ப நிகழ்வாக வள்ளிபுனத்தில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளதும் தோழர் செங்கொடியினதும் நிழல் படங்களுக்கு 26.06.1989 அன்று வவுனியா ஓமந்தைப் பகுதியில் இந்தியப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தை தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் செலுத்தப் பட்டது.


தொடர்ந்து வில்லிய லூபெல் தமிழ்ச்சோலை மாணவியின் கவிதையும், தமிழ்பெண்கள் அமைப்பின் சார்பில் திருமதி கமலினி அவர்களின் பிரெஞ்சு மொழியிலான பேச்சும், செவரோன் தமிழ்ச் சேலை மாணவியின் நடனமும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு திருச்சோதி அவர்களின் பேச்சும், ஆஜர்ந்தை தமிழ்ச் சோலை மாணவியின் பிரெஞ்சு மொழியிலான பேச்சும் இடம் பெற்றது.


பெருமளவு சுற்றுலா பயணிகள் நிகழ்வுகளை பார்வையிட்டுச் சென்றதுடன், துண்டுப் பிரசுரங்களையும் பெற்றுச் சென்றனர்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு  பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here