செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவுநாள் !

0
470

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறீலங்கா இனப்படுகொலை அரச போர்விமானங்கள் ஆகஸ்ட் 14, 2006 அன்று 61 சிறுமிகளை கோரப் படுகொலை செய்த 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அன்றைய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்கும் ஆவர்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த கொடிய நிகழ்வை யாராலும் மிக எளிதாக கடந்து போக முடியாது. போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் 1991 ஐப்பசி 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்றைய தாக்குதலி 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 150இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் பலர் தற்போது சிறப்புத் தேவையுடையவர்களாக உள்ளனர். இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டோர் மீதே நடத்தப்பட்டது என சிறீலங்கா அரசு அப்போது உலக நாடுகளுக்குத் தெரிவித்திருந்தது.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here