புத்தளம் கரையோர பகுதிகளில் பெருந்தொகையான மருந்துவக் கழிவு பொருள்கள் கரையொதுங்கியுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக இந்த மருந்துவ கழிவு பொருள்கள் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன் பைகள், ஊசி வகைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்ட பல மருத்துவ கழிவு பொருள்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மருத்துவ பொருள்களிலும் இந்திய அரசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகளால் தமக்கு நோய் பரவும் என புத்தளப் பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.