கோரிக்கையை ஏற்றது சிறீலங்கா அரசு தொடருந்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

0
347

கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறீலங்கா தொடருந்து ஊழியர்கள் இன்று தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது என்று தொடருந்துச் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் ஜீ.எம்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையிலுள்ள மைத்திரியின் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை இச் சந்திப்பு நடந்துள்ளது.
தமது கோரிக்கைகளை சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஏற்றுக் கொண்டதாகவும், அதனை முன்னெடுக்க உரிய தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் ஜீ.எம்.பீரிஸ் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here