நெடுந்தீவுக்கு தென் கிழக்கே சிறீலங்கா கடற்படையினரால் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழ்நாடு இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரின் விசாரனைக்கு பின்னர் இன்று விடுமுறை என்பதால் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேசன் வீட்டில் குறித்த 27 தமிழக மீனவர்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 27 மீனவர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார் இதனையடுத்த மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர் .
சிறீலங்காவின் புதிய மீன்பிடி சட்டத்தின் பிரகாரம் எல்லை தாண்டி மீன்பிடித்தால் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை அவை கைப்பற்றப்படுவதோடு மீனவர்கள் 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படுவர். மேலும், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்படும்.