மாதந்த வேதனத்தை அதிகரிக்கக்கோரி கடந்த புதன்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடருந்து இயந்திர கட்டுப்பாட்டு ஊழியர்கள், இன்றுடன் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் ஆசன முன் பதிவினையும் நிறுத்தி வைத்துள்ள நிலையில் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரியவருகின்றது.
முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென சிறீலங்கா நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்த வேலை நிறத்தப் போராட்டத்தால் வெளிமாவட்டங்களில் இருந்து தலைநகருக்கு வேலைவருபவர்களின் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.