9 வது நாளக தொடரும் மீனவர்களின் போராட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் !

0
194

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றுடன் ஒன்பதாவது நாளாக தொடர்ச்சியாக அப் பகுதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முனனெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் உப தவிசாளர் க.ஜனமேயெயந்த் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது பிரதேச இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருவதானது எமது எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது இங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவ சங்கத்தினரின் கோரிக்கையும் எமது கடள்வளத்தை பாதுகாக்குமாறும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக்கோரியுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தன்மைகளை விளங்காது அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிடமுடியாது. நாளைமறுதினம் மத்திய அமைச்சர் தலைமையிலான பேச்சுக்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்டும் என்று எதிர்பாக்கின்றோம் என்றார். .
இதேவேளை கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் முல்லைத்தீவு சிறீலங்கா காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.தற்போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here