சம்மந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி சபாநாயகரால் காப்பாற்றப்பட்டது!

0
203


அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தம்மால் மாற்ற இயலாது என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும் என சபாநாயகர் கூறியுள்ளார்.
அதற்கமைய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் செயற்பட முடியும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்பட்ட பாரிய சர்ச்சையை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய பாராளுமன்ற சபை அமர்வின் ஆரம்பத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார் இதன் மூலம் சம்மந்தனின் எதிர்கட்சி தலைவர்பதவி காப்பாற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here