நேற்று இந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 91 பேர் பலியாகி பல கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில் இன்று காலை 04.37 மணியளவில் மாலைதீவில் 5.5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
130 கிலோமீற்றர் ஆழத்தில் இப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் குறித்து தெரிவித்த மாலதீவு அவசரகால உதவிப்பிரிவு கடந்த நான்கு வருடத்தில் இதுவே பெரிய பூகம்பம் என்றும் இதனால் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை 8.10 மணியவில் அதே பகுதியில் 2.7 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.