இந்தோனேசியா பாலி மற்றும் லொம்பொக் தீவுகளில் பாரிய பூகம்பம் சுனாமி எச்சரிக்கை!

0
223


இந்தோனேசியா பாலி மற்றும் லொம்பொக் தீவுகளை பாரிய பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து சுனாமியை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த வாரம் பாரிய நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதில் 12 பேருக்கும் மேல் உயிரிழந்து பலர் காயமடைந்தனர். சுமார் 100 கட்டிடங்கள் கடும் சேதமடைந்தன. நிலச்சரிவையும் ஏற்படுத்தியிருந்தது.
பெருமளவு மக்கள் வெளியேற்றப்பட்ட லொம்பொக் தீவினை பூகம்பம் தாக்கியுள்ளது.
இன்றைய நிலநடுக்கம். ரிச்டர் அளவையில் 7.1ஆக பதிவாகியுள்ளது.
இது வரை 37 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலியையும் பூகம்பம் தாக்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.
விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகளும் வெளியே ஓடி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் மக்களை பதட்டமடையவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
பூகம்பம் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
வடக்கு லொம்பேக் தீவில் மாத்திரம் 28 பேர் பலியாகி உள்ளனர். எனையவர்கள் மற்ற இடங்களில் பிலயாகி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here