சுவிஸ் அல்ப்ஸ் மலைத் தொடருக்கு அண்மையில் சிறியரக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் விமான பணியாளர்கள் மூவர் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று மாலை 17.00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 42 தொடக்கம் 84 வயதுடையவர்கள் பலியாகி உள்னர்.
JU-Air விமான சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப் பட்டுள்ளன. விபத்துக்கு உள்ளான இந்த சிறிய JU-52 விமானம் 1932 – 1952 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட விமானமாகும் . இந் நிறுவனத்தில் இத்தகைய 20 விமானங்கள் உள்ளன.