சிறீலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது என்றும் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இன்றி எந்த ஒரு வேட்பாளராலும் வெற்றி பெற முடியாது என்றும் முஸ்லீம் காங்கிரசு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் 28 ஆவது பேராளர் மாநாடு இன்று நடைபெற்றது.
பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.